Wednesday 23 May 2012

நான்


பசும் வயலும் பனை மரமும்
கருங் காடும்  கடும் உழைப்பும்
வளம் கொழித்த தமிழ் தேசத்தில்
பிறந்தவன் நான்

கொடு முடியர்  கொடும் ஆட்சி
கொன்ரொழித்த குலத் தலைவன்
காரிகலன் காலத்தில்
வாழ்ந்தவன் நான்


உணர்வுகள் செத்து
உயிரினைக் காத்திட
பொறுளுடை  தேசத்துக்கு
புலம் பெயர்ந்தவன் நான்

குப்பை மேட்டின் மேல்
மறந்திடும் பூச்சியின்
இறக்கை காற்றினில்
இதமாய் துாங்கியவன் நான்

பஞ்சு மெத்தையில்
படுக்கும் பொழுதினில்
பணத்தின் சுமையினில்
இரவை தொலைத்தவன் நான்

வறுமை நிலையிலும்
வாழ்வை அழித்திடா
வாழ்ந்த அறிஞர்கள்
கதைகளை படித்தவன் நான்

நினைவுகள் இருந்தும்
நின்மதி தொலைந்தும்
உறவுகள் இழப்பிற்கும்
கண்ணீர் தவிர்த்தவன் நான்

அறுசுவை உணவும்
ஆனந்தக் கூத்தும்
ஆடை அணிகலமும்
அனுபவித்தவன் நான்

தெருவில் துாங்கினும்
தெருத் தெருவாய் அலையினும்
தேசச் சுமையினால்
சிந்தை கலங்கியவன் நான்
ப.பார்தீ

No comments:

Post a Comment