Tuesday 1 May 2012

எதிரியானதே உலகு


கண்ணீரின் இழப்பை
உணராத மீன்கள்
தண்ணீரோடு உறவாகும்

வாழ்கை என்பது
சூழலால் தீர்மானித்து
அதன் பாதையில் பயனிக்கின்றது


துன்பம் இன்பம்
இயங்கியல் உலகின்
உயிரோட்டம்

இலாபமற்ற வாழ்கையில்
மரணம் பெறுபேராகும் போது
நாம் இயங்குவதில்லை

அடுத்ததை எதிர்பாக்கும் வாழ்க்கை
இழந்த இன்றை வாழ்வதற்காக
ஆவிகள் சித்தரிக்கப்டுகின்றது

சிந்தனை யாவும் நல்லதை எண்ணும் போது
வாழ வேண்டும் என்ற ஏக்கம்
தவறை சரியாக செய்கின்றது

நான் என்ற வெளியில்
எங்களுக்கு என்ற தேடல் வந்த போது
எதிரியானதே உலகு
ப.பார்தீ

No comments:

Post a Comment