Friday, 27 April 2012

பருவ மழை


மாற்றங்களை ஏற்காது
எங்களை காக்கவேண்டிய
குடைகள்

ஐனநாயக
உரிமையாளர்களின்
கைகளில்


ஐந்தாண்டுக்கு ஒருமுறை
பொழியும் பருவமழைக்கு
விரிக்கப்படும்

காலத்தின் வேகத்தில்
சீலைகளை இழந்துவிட்டு
காக்க நடிக்கும்

மீண்டும் வரும் மழை


புதிய கொள்வனவுகள்
ஐனநாயக சக்திகளிடம்
பிச்சை எடுக்கும்

சுழற்ச்சி வேகத்தில்
சுனை உணராத
நாங்கள்  மீண்டும் அழிக்கப்படுவோம்
ப.பார்தீ

No comments:

Post a Comment