Tuesday 24 April 2012

தெட்டனைக்கும் கரங்கள்


விளைச்சல் காணாத
பயிர்களின் அறுவடை
விஞ்ஞானம் தான்
என்ன செய்யும்


வினவுகின்ற கேள்விகளுக்கு
நட்பு என்ற பதிலுடன்
நாளைய தேடுதல்
தொடங்குகின்றது

உள்ளங்கைக்குள் சுருக்கப்பட்ட
உலகில்
தனிமையின் ஏக்கம்
புதியதை தேடுகின்றது

தேடுதலின் பரிணாமம்
தேடப்படுபவன்
சிந்தனைக்குள் சிக்கி
சிதறுண்டு கிடக்கிறது

அறிவோடு அழிவும்
கொட்டிக்கிடக்கும் காற்று வெளியில்
தொட்டணைக்கும் கரங்களின்
சுவை இரசனைக்கேற்ப

பெரு மழையில் நனைந்து
காயும் காட்டு விலங்குகள்
சிலுகு நீர்பட்டு சீக்காகி
வீழ்வதா
ப.பார்தீ

No comments:

Post a Comment