Saturday, 14 April 2012

காதல்


மதி அது மங்கி
மனமது தீண்டும்
மது அது காதல்

வயதது ஏறி
வாலிபம் முற்ற
வருவது காதல்


துதியது பாடும்
துழையுடை இதயம்
துலக்கிடும் காதல்

காற்றினில் வார்த்தையை
கண்களால் பேசிடும்
கதியது காதல்

இரவினில் அழகும்
இடியினில் சுகமும்
இணைவது காதல்

மழையினில் நனைதலும்
மார்பினில் துாங்கலும்
மகிழ்வது காதல்

பொய்களில் உண்மையை
போற்றுதல் செய்திட
புழுகுதல் காதல்

அருகினில் இருப்பவர்
அசிங்கமாய் பேசினும்
அணைபது காதல்


இணைதலில் இனத்தையும்
இழப்பினில் இறப்பையும்
இசைப்பது காதல்

காதலில் வீழ்வதும்
காதலில் சேர்வதும்
காலத்தின் வாழ்வே
ப.பார்தீ

No comments:

Post a Comment