Thursday 5 January 2012

சுயமாக சிந்தி


இருளின் பிறப்போடு
தன்னை சூரியன் என எண்ணி
உறங்கிக் கிடக்காது
மின்மினிப் பூச்சிகள்


பருவங்களின் மாற்றம் தான்
மனிதனை இயற்கை மீதுள்ள
சலிப்பை தவிர்க்கும்
விதிவிலக்கல்ல அவன் குணமும்

சுரப்புக்களின் துாண்டல்
எழுச்சி கொள்ள வைத்து
இன்பம் எனும் தேடலை
இரட்டிப் பாக்குகின்றது
துன்பம் இன்பத்தின்
நண்பனே

சுவைக்கப்படாத பழங்கள்
பூமியில் அழுகி
விழுந்து கிடக்கின்றனா
வெளிக்காட்டப் படாத
உணர்வுகளும் கூட

துளியின் வரவால்
துளிர்க்கும் அறுகாக
பருவங்களின் மாறுதல்
பக்குவப்படுத்துகின்றது மனிதனை

உச்சயில் இருந்தும்
பள்ளத்தை  நேக்கும் நீர்வீழ்ச்சி
இழக்கும் தன் சுய அழகை
சுயமாக சிந்திக்காத
மனிதனுக்கு இணையாக
ப.பார்தீ

No comments:

Post a Comment