Thursday, 19 January 2012

நாமக்கு நாமே வெற்றியாளன்


கருமேகம் கரைதலுக்காய்
சுடுபூமி காத்திருக்கு

சிலவேளை மறு நொடியே
தந்திடலாம் மனங்குழிர

எது உண்மை?


எதிர்பார்ப்பு உள்ளவரை
இழப்புக்கள் உருவாகும்

பூமி என்ன விதிவிலக்கா
பொசுங்கும் செடிகள் முன்

தனக்குள்ளே உள்ளதனை
சரிவரத் தான் செய்யவில்லை

எதற்கும் மனிதர் நாம்
எதிர்பார்ப்பு என்பதனை
எமக்கு நாமே வைத்துக் கொண்டால்
நாமக்கு நாமே வெற்றியாளன்
ப.பார்தீ

No comments:

Post a Comment