Saturday, 21 January 2012

பயனுள்ள படைப்பாளி


புவியீர்ப்பு  விசையின்
சக்திக்குள்ளே
உயரப்பறக்கும் பருந்து
கண்ணில்பட்டதை
தன்னிலும் சிறியதென்றது


துாரம் எம் பார்வைக்குள்
அடக்கப்படும் காட்சிகள் அல்ல
அதையம் தாண்டும்
அருகே போகும்போது

ஈர்க்கப்படும் விடையம்
எம் சிந்தனையில்
கட்டுப்பாட்டை விதிக்கின்றது
சாட்சி
ஒதுக்கப்பட்ட உண்மைகள்


அருகில் இல்லாத
ஒன்றின் மீதான விருப்பம்
இருப்பதை ஒதுக்கி வைக்கின்றது
இழக்க நேரிடும் என்ற
உண்மை அறியாதவரை

சிந்தனைப் பந்தில்
அடைக்கப்பட்ட காற்றல்ல
பரந்த விரிந்த பூமிப்பந்தில்
பார்வையின் நோக்கத்தில்
பயனுள்ள படைப்பாளி
ப.பார்தீ

No comments:

Post a Comment