Saturday 14 January 2012

புதுமை செய்வோம்


தை முதல் நாள்
கிழிக்கப்பட்ட நாட்காட்டி யில்
உழவர் திருநாளுடன்
புது வருடத்துடன் பிறக்கட்டும்

பொங்கி வடிந்த
பொங்கல் நுரையுடன்
எங்கள் துன்பங்கள்
ஓடி ஒழியட்டும்

தித்திக்கும் தேனினும் இனிய
பொங்கல் இத் திரு நாளிளாவது
உழவனை எண்ணிப் பாடட்டும்

வண்ணத் தோரணம்
வாழையிலை பரிமாற்றம்
இன்னும் இயற்கைதான்
உயர்ந்தது என்று உணர்த்தட்டும்

சூரியனுக்குப் படைக்கப்படும்
பொங்கல் அவன் உண்ணாவிடினும்
பண்பாட்டோடு நன்றி சொல்லும் பழக்கத்தை
எம் பரம்பரைகள் அறியட்டும்

எல்லா வீட்டிலும்
பொங்கல் செய்யினும்
பகிர்ந்து கொடுத்து உண்டு
காக்கையை மிஞ்சி விடும்
ஒற்றுமை ஓங்கட்டும்


வெடிக்கப்படும் பட்டாசுகள்
கால ஓட்டத்தில்
எம் கலாச்சாரம் கலந்ததை
உணர்த்தட்டும்


தை பிறந்தால் வழி பிறக்கும
பழமொழியை புதுமை நோக்க
பொங்கலோடு புதுவருடம்
போற்றி நாமும் புதுமை செய்வோம்
ப.பார்தீ

No comments:

Post a Comment