Sunday, 29 January 2012

சுவாசம்


உடலங்கள்  விதைக்கப்பட்ட
பூமியில் திருவிழா

நாட்டப்படும் கம்பங்கள்
விதைக்கப்பட்ட உடலங்களில் பட்டு
கதறுகின்றது


Saturday, 21 January 2012

பயனுள்ள படைப்பாளி


புவியீர்ப்பு  விசையின்
சக்திக்குள்ளே
உயரப்பறக்கும் பருந்து
கண்ணில்பட்டதை
தன்னிலும் சிறியதென்றது


Thursday, 19 January 2012

நாமக்கு நாமே வெற்றியாளன்


கருமேகம் கரைதலுக்காய்
சுடுபூமி காத்திருக்கு

சிலவேளை மறு நொடியே
தந்திடலாம் மனங்குழிர

எது உண்மை?

Saturday, 14 January 2012

புதுமை செய்வோம்


தை முதல் நாள்
கிழிக்கப்பட்ட நாட்காட்டி யில்
உழவர் திருநாளுடன்
புது வருடத்துடன் பிறக்கட்டும்

பொங்கி வடிந்த
பொங்கல் நுரையுடன்
எங்கள் துன்பங்கள்
ஓடி ஒழியட்டும்

தித்திக்கும் தேனினும் இனிய
பொங்கல் இத் திரு நாளிளாவது
உழவனை எண்ணிப் பாடட்டும்

வண்ணத் தோரணம்
வாழையிலை பரிமாற்றம்
இன்னும் இயற்கைதான்
உயர்ந்தது என்று உணர்த்தட்டும்

சூரியனுக்குப் படைக்கப்படும்
பொங்கல் அவன் உண்ணாவிடினும்
பண்பாட்டோடு நன்றி சொல்லும் பழக்கத்தை
எம் பரம்பரைகள் அறியட்டும்

எல்லா வீட்டிலும்
பொங்கல் செய்யினும்
பகிர்ந்து கொடுத்து உண்டு
காக்கையை மிஞ்சி விடும்
ஒற்றுமை ஓங்கட்டும்


Monday, 9 January 2012

விடிவுக்காக


இன்றும் உயிருடன் இருக்கிறாய்
சுட்டு எழுப்பியது சூரியன்
ஓயாது உழைக்கும் வயிறு
எழுப்பியது ஓசை


Saturday, 7 January 2012

புதிய உலகிற்கு


துாக்கம் தொலைத்த
இரவுகளைக் கேட்டுப் பார்
துடிக்கும் இதயத்தில்
உன் உயிரின் ஓசையை


Thursday, 5 January 2012

சுயமாக சிந்தி


இருளின் பிறப்போடு
தன்னை சூரியன் என எண்ணி
உறங்கிக் கிடக்காது
மின்மினிப் பூச்சிகள்