Friday, 27 April 2012

பருவ மழை


மாற்றங்களை ஏற்காது
எங்களை காக்கவேண்டிய
குடைகள்

ஐனநாயக
உரிமையாளர்களின்
கைகளில்

Tuesday, 24 April 2012

தெட்டனைக்கும் கரங்கள்


விளைச்சல் காணாத
பயிர்களின் அறுவடை
விஞ்ஞானம் தான்
என்ன செய்யும்


Tuesday, 17 April 2012

வெப்பத்துடிப்பு

அற்புதமான நிகழ்வுகளை
ஆய்வு செய்யும்
ஞாபகங்களின்
ஏக்கத்தால்
வீசப்படும் பெரு மூச்சுக்காற்றில்
பிரபஞ்சம் வெப்பத்தில் தவிக்கின்றது

மாற்றங்கள்
முன் நோக்கிய பயணத்தின்
சாரதி

திரும்பத் தெரியாத
வளர்ச்சிப்பாதையின்
எச்சங்கள்
நினைவுகளாகவே
எமக்குள்
ப.பார்தீ

Monday, 16 April 2012

கருவறைவாசல்


எங்கள் கருவறைவாசல்
அடைக்கப்பட்டிருக்கின்றது
சாதியாக
இனமாக
மதமாக
மொழியாக
உடைக்கத் துடிக்கும்
எங்கள் சக்தி உள்ளே
அடக்கும் சக்திகள்
அடிமைப்பட்டிருக்கும்
அறியாமையை உணறும் வரை
உடைக்க முடியும்
எனற கனவுகளுடன்
கருவறைக்குள்
ப.பார்தீ

Saturday, 14 April 2012

நாங்கள் ஏனெடா


அண்டம் துளைத்து
அகிலம் நோக்க
கொண்ட பெயரெடா

கொண்ட கொள்கையில்
குழையா நின்று
வென்ற பெயரெடா


மன்றம் போட்டு
மக்களை காத்த
மாணப் பெயரெடா

வந்த எதிரியை
வகையாய் நோக்கி
வென்ற பெயரெடா

உங்கள் இருக்கையை
உரமாய் காக்க
மின்னும் பெயரெடா

இன்று அனைவரும்
இசைவாய் பேசி
தின்னும் பெயரெடா

எங்கள் பெயரினை
ஏலம் விட்டிட
நீங்கள் யாரெடா

உங்கள் கொள்கையை
உறத்தி  சொல்லிட
நாங்கள் ஏனெடா
ப.பார்தீ

காதல்


மதி அது மங்கி
மனமது தீண்டும்
மது அது காதல்

வயதது ஏறி
வாலிபம் முற்ற
வருவது காதல்

Wednesday, 4 April 2012

சாம்பல் பூக்கள்


உங்கள் உடலங்கள்
உளைப்புக்காய் உப்பேறி
உச்சத்தில் நீறாகி
தேசத்தில் படர்ந்துவிட

கண்ணீர் துளிகளிலும்
கை வணங்கும் மனங்களிலும்
எண்ணி முடியாத
ஏக்கத்தை விதைத்தீரே

Sunday, 1 April 2012

தேற்றம்


தீட்ட முடியாத வார்தைக்குள்
செருகி நிக்குது அன்பு
போற்ற நினைக்கும் உள்ளத்தில்
புதைந்து கிடக்குது பாசம்

நேற்று நீ வளர்த்தசெடியில்
நிறைந்திருக்குது பூக்கள்
சோற்றில் நீவைத்த கரங்கள்
சோர்ந்து நிக்குது இன்று