Friday 22 March 2013

அந்தம் இனியில்லை



மூடு பனி இரவில்
மூக்காடு செப்பனிட்டு
நீரில் அல்லிபோல
நெஞ்சுக்குள் பூத்த மலர்

ஓலைக் கூறை இடை
ஒழுகும் நீரினைப்போல்
காலத் தேவையதாய்
கண்ணுக்கள் பதிசெய்ய


வானம் பார்த்திடாத
வனப்பில் குண்டுமணி
நிலக்கடலாகி
நெஞ்சுக்குள் கூத்தடிக்கும்

மேளச் சத்தமதாய்
மெல்லிதயம் சுதி செய்யும்
கோணல் கோடுகளும்
கொள்ளை கொள்ளும் சித்திரமாய்

மாணம் மரியாதை
மந்திக்கும் அஞ்சிநிர்க்கும்
கோணல் புளிகூட
கொய்யாவாய் நாசுவைக்கும்

ஏழை வாசல்முதல்
கோழை உள்ளம்வரை
கொள்ளை கொள்ளும் ரிங்காரம்
கொப்பளிக்கும் நீரூற்றாய்

ஆதி பந்தத்தில்
அந்தத்தை எட்டாத
நீளும் ஓர் உணர்வே
நெஞ்சுக்குள் மலர் நினைவே
ப.பார்தீ

No comments:

Post a Comment