Friday, 22 March 2013

தொலைந்த மந்தைகள்



நாட்டைபற்றி எனக்கு
என்ன கவலை
நீதி கிடைத்தால் என்ன
நிலம் அழிந்தால் என்ன

நான் வேற்றுக் கிரகவாசியா
இல்லை
வெளிநாட்டில் குடிபுகுந்த
ஈழத்து தமிழன்

அந்தம் இனியில்லை



மூடு பனி இரவில்
மூக்காடு செப்பனிட்டு
நீரில் அல்லிபோல
நெஞ்சுக்குள் பூத்த மலர்

ஓலைக் கூறை இடை
ஒழுகும் நீரினைப்போல்
காலத் தேவையதாய்
கண்ணுக்கள் பதிசெய்ய

Tuesday, 19 March 2013

வதனம் என் வசந்தம்



இரவின் தனிமையில்
தூங்கிக்கிடைக்கும்
நட்சத்திரங்களை
மேகக்கூட்டம் மூடத்தொடங்கி விட்டது

மின்னல் ஒளியில்
பொழுது புலர்ந்விடாதா என
பூமியில் மொட்டுக்கள்
ஏங்கித்துடிக்கின்றது