Tuesday, 29 January 2013

நம்பினோர் கைவிடப்படார்


நடு நிசிக்கனவா
இல்லை நாலடியார் வரியா
பொருள் ஒன்றோ
பூமியில் புதையும்வரை
அன்பு

இது என்ன
இரசனையில் மாற்றமோ
இல்லை
இரசாயன மாற்றமோ
எது வான போதும்
என் அருகில் நீ வேண்டும்

துடிப்புக்குள் பூகம்பம்
துன்பத்தில் பேரின்பம்
தவிப்பும் தாகமும்
தான் அடங்கி
தான் வெடிக்கும்
எரிமலை

இதற்கோ மானிடம்
இன்னும் பிறக்குது
நாங்கள் புதைந்தது
நல்லதோர் விதை எழும்
நம்பினோர் கைவிடப்படார்
ப.பார்தீ

No comments:

Post a Comment